திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை, சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் பணியாற்றும் சரவணன் என்ற ஆசிரியர், கழிவறைக்கு, அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார், அதனை தொடர்ந்து, தீபாவளி விடுமுறை முடிந்த பின்னர், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள், இன்று பள்ளிக்கு சென்று, ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர், அதனை தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சிங்கப்பெண் அதிரடி படையினர் மற்றும், திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகா ஆகியோர், பள்ளி மாணவியிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டனர், அதனை தொடர்ந்து, தனது மகளுக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆசிரியர் சரவணனை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.. மேலும், பள்ளி வளாகத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால், பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது, மேலும் அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆசிரியரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கொதித்தெழுந்த பெற்றோர் - ஆம்பூரில் பரபரப்பு!
🕒 10 நவ., 2026, 11:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








