Settings

முகப்பு/செய்திகள்/படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!
செய்திகள்

படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!

🕒 7 நவ., 2026, 06:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தீபாவளியைக் கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களில் முண்டியடித்து ஏறும் வீடியோ மற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ள வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள், திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களில் முண்டியடித்து ஏறிச் செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரயில்களில் இடமில்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கழிவறை அருகிலும் நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பின்னலாடைத் தொழிலுக்குப் புகழ்பெற்ற திருப்பூர் மாநகரில் லட்சக்கணக்கான வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் தீபாவளி, சாத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். இதனால், கோவை மற்றும் திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரயில்களில் போதிய இடவசதி இல்லாத நிலையிலும், சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் தொழிலாளர்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ரயிலில் ஏறுகின்றனர். நிற்பதற்குக்கூட இடமில்லாத அளவுக்குப் பெட்டிகள் நிரம்பியுள்ளதால், பயணிகள் பலர் ஃபுட்போர்டில் தொங்கியபடியும் ஆபத்தான முறையிலும் பயணம் செய்து வருகின்றனர்.

பயணிகள் நெரிசலைக் கட்டுப்படுத்தத் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. இன்று புறப்பட்ட அம்ருத் பாரத் ரயிலிலும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பீகார், ஜார்கண்ட் பகுதிகளுக்குச் செல்லும் இந்த நீண்ட தூரப் பயணம் சுமார் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இத்தனை மணி நேரம் போதிய இடவசதியின்றி பயணம் செய்யும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கூடுதலாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔