Settings

முகப்பு/செய்திகள்/"என் உயிரை பணயம் வைத்து செய்கிறேன்" - அதிகாரிகளை விளாசிய தவெக எம்.எல்.ஏ!
செய்திகள்

"என் உயிரை பணயம் வைத்து செய்கிறேன்" - அதிகாரிகளை விளாசிய தவெக எம்.எல்.ஏ!

🕒 7 நவ., 2026, 07:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
"என் உயிரை பணயம் வைத்து செய்கிறேன்" - அதிகாரிகளை விளாசிய தவெக எம்.எல்.ஏ! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •"என்னோட உயிரை பணயம் வைத்து செய்கிறேன்.
  • •இது என்னோட வேலையே கிடையாது, உங்களோட வேலை" - அதிகாரிகளை கடிந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் எட்டிக்குட்டை கங்காநதி ஏரியில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதாக காட்பாடி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சுதாகருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்ததாகவும். சம்பவ இடத்துக்கு சென்ற எம்.எல்.ஏ சுதாகர் ஏரி வழியாக சென்று கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி காட்பாடி வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்த போது அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவரின் உதவியோடு இது நடப்பதாகவும் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். பின், மணல் கடத்தலை தடுக்க தவறிய அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்.எல்.ஏ சுதாகர், என்னுடைய உயிரை பணயம் வைத்து இதை செய்கிறேன் இது என்னுடைய வேலையை கிடையாது இது உங்களுடைய அரசு அதிகாரிகளின் வேலை. நீங்கள் தான் இதை சரியாக கண்காணித்து தடுத்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் அரசு சொத்தை எப்படி கொள்ளையடிக்க விடுகிறீர்கள். யார் வீட்டு, மண்ணை யார் எடுப்பது, காட்பாடி பெண்கள் பள்ளியில் தண்ணீர் தேங்கியுள்ளது அதனை சரி செய்ய, நான் கலெக்டர், தாசில்தாரிடம் மணல் அள்ள அனுமதி கேட்டு வருகிறேன். இவர்கள் அனுமதியே இல்லாமல் 10 லோடு மணல் அள்ளியுள்ளனர் இதனை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔