விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா. இலட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்காலத் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 27-ஐ முன்னிட்டு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 26.11.2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை எம்.எல்.ஏ டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் நேரில் வந்து முதல் நபராக இரத்ததானம் வழங்கி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
இந்த இரத்ததான முகாமில் சுமார் 500 நபர்கள் கலந்துகொண்டு தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில், விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில மற்றும் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்துச் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.









