விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று (நவம்பர் 15) வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் ஆறாம் நாளான இன்று, அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, மாலை வேளையில் முத்தாலம்மன் திடலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு இடையே நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.









