திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திஷா கமிட்டி தலைவர் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் இணை குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக வேலூர் திமுக எம். பி.கதிர் ஆனந்த் பேசுகையில். ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பு திஷா கமிட்டி எப்படி நடக்கிறது. மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர் உப தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நேரில் பேட்டி எடுத்து இதை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். எனக்கு ஒரு சில வேலைகள் இருந்ததால் நான் அந்த திஷா கமிட்டியின் குழுவை சந்திக்கவில்லை. எழுத்துப்பூர்வமான ஒரு கடிதத்தை அவர்களுக்கு சமர்ப்பித்தேன். அத்துடன் முடிந்து விட்டது என்று நினைத்தேன். மத்திய அரசிடம் இருந்து ஒரு கடிதத்தை அனுப்பி நீங்கள் ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறீர்கள். இது சம்பந்தமாக விரிவாக பேச வேண்டும் டெல்லிக்கு வாருங்கள் என்று கூறியிருந்தார்கள். நானும் டெல்லிக்கு சென்றேன் அங்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மீட்டிங்கில் என்னுடைய கருத்துக்களை தான் அதிகமாக பேசினார்கள். த்ரிஷா கமிட்டி கூட்டம் என்பது ஒரு பிணவரைப் போல தான் உள்ளது. ஒரு போஸ்ட் மாட்டம் வேலையை தான் நாம் செய்து வருகிறோம். என்ன நடந்தது என்பதை போஸ்ட் மாட்டம் செய்யக்கூடிய வேலையாக தான் உள்ளது. ஆக்கபூர்வமான செயல்பாடுகள் திஷா கமிட்டி கூட்டத்தில் இந்தியா முழுவதும் இல்லை என்ற கருத்தை முன்வைத்தேன். மத்திய மாநில அரசுகள் அனைவரும் டார்கெட் பேசிக்கில் போய்க்கொண்டிருக்கிறோம். கார்ப்பரேஷன்கள் ஆக இருக்கட்டும். டார்கெட்டை அச்சீவ் பண்ணி முடிப்பதற்காக மட்டுமே உழைத்து வருகிறோம். ஆனால் திஷா கம்யூனிட்டி ரிவ்யூ மட்டுமே செய்து வருகிறார்கள். திஷா கமிட்டியை இரண்டு குழுக்களாக பிரியுங்கள். அடுத்த திஷா கமிட்டிக்குள் என்ன அச்சீவ்மெண்ட்ஸ் இருப்பது என்பதை டார்கெட் பேசிக் கொள்ளவும், , வேலையின் போது என்ன நிறை குறைகள் உள்ளது. இதை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். நமது மாவட்டம் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இன்றி விவசாய மற்றும் தோல் தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய மாவட்டம். இந்த மாவட்டத்தை பொருத்தவரைக்கும் அனைத்து துறைகளும் கண்காணிக்க வேண்டியது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தயவுசெய்து அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கின்ற போது செய்துவிட்டேன் என்ற பதில்களை விட ஆக்கபூர்வமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்ன செய்யலாம். என்கின்ற உங்கள் கருத்துக்களையும் எடுத்து சொல்லுங்கள் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசினார்.
அரசியல்
திஷா கமிட்டி பிணவறை போல் உள்ளது: எம்பி கதிர் ஆனந்த்
🕒 14 நவ., 2026, 05:56 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பத்தூரில் நடைபெற்ற திஷா கமிட்டி கூட்டத்தில் பேசிய எம்பி கதிர் ஆனந்த், இந்தியா முழுவதும் திஷா கமிட்டி கூட்டங்கள் பிணவறை போல் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








