மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா முன்னிலையில் இந்த இணைவு நிகழ்வு நடைபெற்றது.
அதிமுக நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில், கிளை நிர்வாகிகள் வேல்முருகன், குமரேசன், காசிராஜா, செந்தில், முனியாண்டி, குமார், முத்துக்காளை, ஜெயா மற்றும் கல்லணை ஆகியோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின்போது விஜய், ஹரிஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.









