ஈரோடு கோட்டை, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நடக்கும் முக்கிய பூஜைகளில், கைசிக ஏகாதசி வைபவம், பிரதானமானதாகும். நேற்று (20ம் தேதி) கைசிக ஏகாதசியை முன்னிட்டு, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதருக்கு காலை, 7 மணிக்கு திருமஞ்சனமும், மாலை, 6 மணி அளவில், கார்த்திகை மாதத்தில் வரும் கைசிக ஏகாதசியை முன்னிட்டு, காலை திருமஞ்சனமும், மாலையில் கைசிக புராணம் பாடி வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்ந்து கைசிக புராணம் பாசுரங்களாக சேவிக்கப்படும். கைசிக ஏகாதசி அன்று வஸ்திரம் சமர்ப்பித்தலால், பெருமாளுக்கு வஸ்திரத்தினால் ஏற்படும் குறைகள் நீங்கும் என்பது ஐதீகம்ஏற்பாடுகளை பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் செயலாளர் உமாபதி தலைமையில் செய்து இருதார். 365 பட்டு வஸ்திரங்கள்/சால்வைகள் சாற்றப்பட்டன . ஒரு வஸ்திரத்துக்கு மேல், இன்னொரு வஸ்திரம் சாற்றச் சாற்ற, நம்பெருமாள் ஒரு வஸ்திர மலை மேல் நிற்பது போலக் காட்சி அளிப்பார். இதற்காக, பக்தர்கள் பலரும், பட்டு வஸ்த்ரம் வாங்கிச் சமர்ப்பிப்பார்கள். நம்பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் சாற்றப்படும் வஸ்திரங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்காகக் கைசிக ஏகாதசியன்று 365 பட்டு சால்வை, போர்த்தப்படுகிறதுசால்வைகள் சாற்றியவுடன் அவற்றை எடுத்து மடித்து பெருமாளுக்குக் கீழ் வைத்தனர். இதற்காக, பக்தர்கள் பலரும், வஸ்திரம் வாங்கி கொட்டாரத்தில் சமர்ப்பித்தனர்
ஆன்மீகம்
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!
🕒 21 நவ., 2026, 04:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு, பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் சிறப்பு வைபவம் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








