விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 போர்வைகள் பக்தியுடன் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கௌசிக புராணம் வாசிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.









