திருப்பத்தூர்: கார்த்திகை மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
இந்த நன்னாளை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ ஐயப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஐயப்ப சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சியளித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை யாத்திரைக்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்திப் பரவசத்துடன் காணப்பட்டது.









