திருவண்ணாமலை உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில், ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.5,06,72,963 ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் சுமார் 120 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். முடிவில், உண்டியல் மூலம் மொத்தம் 5 கோடி, 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 963 ரூபாய் ரொக்கம் பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், பக்தர்கள் நேர்த்திக்க கடனாக 160 கிராம் எடையுள்ள தங்க நகைகளும், 1 கிலோ 540 கிராம் எடையுள்ள வெள்ளிப் பொருட்களையும் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.









