Settings

முகப்பு/ஆன்மீகம்/மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் போர்வெல் தண்ணீரில் புனித நீராடி வழிபாடு:-
ஆன்மீகம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் போர்வெல் தண்ணீரில் புனித நீராடி வழிபாடு:-

🕒 8 நவ., 2026, 01:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் போர்வெல் தண்ணீரில் புனித நீராடி வழிபாடு:- - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் போர்வெல் தண்ணீரில் புனித நீராடி வழிபாடு:-

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதத்தில் புனித நீராடியபோது ஐப்பசி அமாவாசை தினத்தன்று இறைவன் காட்சியளித்ததாக புராணம் கூறுகிறது. இந்த புராணத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி மாத துலா உற்சவம் பிரசித்தி பெற்றது. 30 நாள்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவத்தில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 18-ஆம்தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில், மாயூரநாதர் கோயிலில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீமாயூரநாதர் சுவாமி, அபயாம்பிகை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தளுச் செய்யப்பட்டனர். வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புறப்பாடு செய்யப்படும் ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி திருக்கயிலாய வாகனத்திலும், கங்கையம்மன் முதலை வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். மேலும், விஸ்வநாதர் கோயில்கள், ஐயாறப்பர் கோயில்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். பின்னர், இரண்டு பக்க காவிரி கரைகளிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரியில் நீர்வரத்து இல்லாததால் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வெல்லில் பக்தர்கள் புனித நீராடினர். காவிரியின் வடக்குக் கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புனித நீராடினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔