Settings

முகப்பு/ஆன்மீகம்/அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்!
ஆன்மீகம்

அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

🕒 6 நவ., 2026, 05:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு 1000 லிட்டர் பால் மற்றும் சிறப்பு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

கோவிலின் ஐந்தாம் பிரகாரம் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு இன்று சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதையொட்டி மஞ்சள் தூள், விபூதி, குங்குமம், அபிஷேகப் பொடி, சீயக்காய், இளநீர், தேன், தயிர், சந்தனம், கரும்புச்சாறு மற்றும் 1,000 லிட்டர் பால் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து, தாமரை, ரோஜா, கோழிக்கொண்டை, வில்வ இலை, தவணம், வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் நந்தி பகவானுக்கு பிரம்மாண்ட மாலைகள் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிரதோஷ தினமான இன்று நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் திருவண்ணாமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கத்துடன் நந்தி பகவானையும், அருணாச்சலேஸ்வரரையும் தரிசித்தனர்.

பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை மனதார வழிபட்டால், திருமணம் தடைபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு புத்திரப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔