Settings

முகப்பு/ஆன்மீகம்/மகா தீபத்திற்கு தயாராகும் திருவண்ணாமலை: நெய் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம்!
ஆன்மீகம்

மகா தீபத்திற்கு தயாராகும் திருவண்ணாமலை: நெய் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம்!

🕒 5 நவ., 2026, 06:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மகா தீபத்திற்கு தயாராகும் திருவண்ணாமலை: நெய் காணிக்கை செலுத்த பக்தர்களின் கூட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காணிக்கை செலுத்த கவுண்டர் திறப்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, ஆவின் நிறுவனத்திடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், வரும் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இந்த மகா தீபத்திற்காக 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணி திரியாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவதற்காக, கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு பிரத்யேக கவுண்டரை இணை ஆணையர் பரணிதரன் சிறப்பு பூஜையுடன் இன்று தொடங்கி வைத்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக நெய் குடங்களை வழங்குவதுடன், பணமாகவும் காணிக்கை செலுத்தலாம். இதற்காக ஒரு கிலோ நெய் ரூ.600, அரை கிலோ ரூ.300 மற்றும் கால் கிலோ ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவுண்டர் திறக்கப்பட்ட முதல் நாளே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!ஆன்மீகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

manimaran🕒 நவ. 21
திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்ஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகா ரத தேரோட்டம் கோலாகலம்

manimaran🕒 நவ. 21
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்ஆன்மீகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 108 போர்வை சாற்றும் உற்சவம் கோலாகலம்

Ramkumarsamy🕒 நவ. 21
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!ஆன்மீகம்

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 365 வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் வைபவம்!

Dinesh🕒 நவ. 21
கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சனிக்கிழமை - விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்

ARAVINDHAN🕒 நவ. 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔