விவசாயம்
வாணியம்பாடி அருகே உள்ள நாகலேரி ஆக்கிரமிப்புகளை அகற்றி படகு இல்லம் மற்றும் பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை.
🕒 1 நவ., 2026, 12:29 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த
ஈச்சங்கால்,தேவஸ்தானம், அழிஞ்சிகுளம் ஆகிய 3
ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் தென்னை ,கரும்பு,நெல் மற்றும் காய்கறி வகைகளை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த விவசாயிகளுக்கு பாசன வசதி பெற
3 ஊராட்சிகளுக்கும் மைய பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நாகலேரி என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது
அந்த ஏரி நிரம்பினால் மூன்று ஊராட்சிகளில்
உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசனமும் ,100 ஏக்கருக்கு மேல் நிலத்தடி நீர் பாசன வசதி பெறுவதுடன் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து 3 ஊராட்சி மக்களின் குடிநீராதரமாகவும் இருக்கும், மேலும் இதன் உபரி நீர் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு செல்லும்,
ஆனால் இந்த ஏரி 10 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரத்து இல்லாமல் வறண்டு போய் இருந்தது.பின்னர்
கடந்த 2022 ஆண்டு பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து வந்தது. அதற்கு பின்னர் மீண்டும் நீர் வரத்து இல்லாமல் மீண்டும் அந்த ஏரி வறண்டு போய் விட்டது.இந்த நிலையில் இராமநாயக்கன்பேட்டை- அம்பலூர் பாலாற்றுக்கு இடையே. கடந்த 2025 - 2026 ஆம் ஆண்டு நீர்வளத்துறை நிதி ரூபாய் 29 அரை கோடி மதிப்பீட்டில் புதியதாக அணைக்கட்டு கட்டப்பட்டது.
பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில்
பாலாற்றில் இருந்து நாகலேரி ஏரிக்கு தூர்ந்து போன சுமார் 40 ஆண்டுகள் பழமையான நீர்வரத்து கால்வாயுடன் இந்த புதிய அணைக்கட்டில் இருந்து நாகலேரிக்கு இணைப்பு உருவாக்குவப்பட்டு இருந்தது.ஆனால் மணல் கொள்ளை காரணமாகவும்,கால்வாய்ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது.இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக நீர் வளத்துறை சார்பில் நீர் வரத்து கால்வாய்களை கண்டறிந்து 2 பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூறுவாறும் பணிகள் நடைபெற்றதன் காரணமாக புதிய அணைக்கட்டில் இருந்து நீர் வரத்து கால்வாய் வழியாக தடையின்றி நாகலேரிக்கு நீர் வரத்து வந்துகொண்டு இருக்கிறது. இதற்கு முயற்சி மேற்கொண்ட
நீர்வளத்துறை பொறியாளர்கள் பவித்ரன்,பிரசன்னா ஆகியோருக்கு 3 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்
இந்த ஏரி நகர பகுதிகளையொட்டி உள்ளதால்
நாகலேரி முழுவதும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி படகு இல்லம் மற்றும் பொழுது பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.








