பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறப்பு பருவம் சம்பா நெல் - II பயிர் செய்யவுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். வேளாண் பயிர் சிறப்பு பருவம் சம்பா நெல் - II பயிருக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு ரூ. 270/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டில் சிறப்பு பருவம் சம்பா நெல் II பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 16.12.2026 ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
விவசாயம்
விவசாயிகளே கவனம்! சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 16 கடைசி நாள்!
🕒 31 அக்., 2026, 07:54 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பருவம் சம்பா நெல்-II பயிரிடும் விவசாயிகள் டிசம்பர் 16-க்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








