திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்தில், 'பயறு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' 2026–2027 திட்டத்தின் கீழ் வரப்பு விதை உளுந்து விதைப்பு பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பங்கேற்று, 12 விவசாயிகளுக்குக் கிலோவுக்கு ரூ.120 மானிய விலையில் மொத்தம் 210 கிலோ உளுந்து விதைகளை வழங்கி விதைப்புப் பணியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடியை விரிவுபடுத்துவதுடன், விதை உற்பத்தியையும் அதிகரித்து விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்த அரசு வழங்கும் பல்வேறு மானியத் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இதில் வேளாண் கல்லூரி மாணவர்களும் விவசாயிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.









