விருதுநகர்: வருமான வரித்துறை சார்பில், 'அயல்நாட்டு சொத்து விவரங்களை தாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்-2026' (Foreign Assets of Small Taxpayers - Disclosure Scheme 2026) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் விருதுநகரில் நேற்று (நவம்பர் 5, 2026) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுரை வருமான வரித்துறை இணை ஆணையர் B. அழகப்பன், இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். மேலும், பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கங்களை அளித்தார்.
வருமான வரி அதிகாரிகள் E. கோமதி சங்கர் மற்றும் P.P. சின்னத்துரை ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர். இக்கூட்டத்தில் பட்டயக் கணக்காளர்கள் (Auditors), வருமான வரி ஆலோசகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.









