Settings

முகப்பு/செய்திகள்/கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!
செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!

🕒 23 நவ., 2026, 11:44 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் இரண்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கொடைக்கானல் நான்காவது தெருவில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஆர்.கே. குமார் என்பவர், கொடைக்கானல் கீழ்மலை பூலத்தூர் பகுதியில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயத்திற்காக போர்வெல் அமைக்க அனுமதி கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அப்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் பதிவு உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் நிலத்திற்கு அனுமதி வழங்க ரூ.30ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.கே. குமார் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திட்டமிட்டு, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆர்.கே. குமாரிடம் கொடுத்து அனுப்பினர்.

ஆர்.கே. குமார் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனி அறையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!செய்திகள்

வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!

Muralidharan🕒 நவ. 23
சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!செய்திகள்

சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!

Arivazhagan🕒 நவ. 23
அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!செய்திகள்

அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!

Vijayaragavan🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!செய்திகள்

முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!

Vijayaragavan🕒 நவ. 23
முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!செய்திகள்

முரசொலி மாறன் நினைவு தினம்: மயிலாடுதுறையில் திமுகவினர் மலரஞ்சலி!

SASHVI🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔