Settings

முகப்பு/செய்திகள்/சாமி கும்பிடப் போன நேரத்தில் விபரீதம்! தீப தரிசனத்திற்குச் சென்ற குடும்பத்தின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!
செய்திகள்

சாமி கும்பிடப் போன நேரத்தில் விபரீதம்! தீப தரிசனத்திற்குச் சென்ற குடும்பத்தின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

🕒 25 நவ., 2026, 11:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாமி கும்பிடப் போன நேரத்தில் விபரீதம்! தீப தரிசனத்திற்குச் சென்ற குடும்பத்தின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தீப தரிசனத்திற்குச் சென்ற கட்டிடத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10.5 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர்: திருவண்ணாமலை தீப தரிசனத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற கட்டிடத் தொழிலாளி குடும்பத்தின் வீட்டின் பூட்டை உடைத்து, 10.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் குருவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (53). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று காலை தனது மனைவி வனிதா மற்றும் மகன் சண்முகத்துடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபத் தரிசனத்தைக் காண வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், தரிசனம் முடிந்து நள்ளிரவு சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10.5 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததுடன், கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிவாவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜீவானந்தம் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கதவை உடைத்துத் திருட முயன்றுள்ளனர். எனினும், அங்கு மதிப்புமிக்க பொருட்கள் ஏதுமில்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரு வீடுகளைக் குறிவைத்து நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஈரோட்டில் கொதித்தெழுந்த விவசாயிகள்!செய்திகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஈரோட்டில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

Dinesh🕒 நவ. 25
அரசுப் பேருந்துகள் தாமதம்: மேலூரில் கொதித்தெழுந்த கிராம மக்கள்!செய்திகள்

அரசுப் பேருந்துகள் தாமதம்: மேலூரில் கொதித்தெழுந்த கிராம மக்கள்!

Vijay🕒 நவ. 25
மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!செய்திகள்

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!

Ramkumarsamy🕒 நவ. 25
கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!செய்திகள்

கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!

NESARAJAN🕒 நவ. 25
ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!ஆன்மீகம்

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔