Settings

முகப்பு/செய்திகள்/நட்சத்திர ஓட்டல் ரிவ்யூ வேலை... டெலிகிராம் மூலமாக ரூ.1.90 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்!
செய்திகள்

நட்சத்திர ஓட்டல் ரிவ்யூ வேலை... டெலிகிராம் மூலமாக ரூ.1.90 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்!

🕒 27 நவ., 2026, 09:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நட்சத்திர ஓட்டல் ரிவ்யூ வேலை... டெலிகிராம் மூலமாக ரூ.1.90 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கூகுள் மேப்பில் நட்சத்திர ஓட்டல்களுக்கு மதிப்பீடு அளித்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, திருச்சி மென்பொருள் பொறியாளரிடம் ரூ.1.90 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கூகுள் மேப்பில் நட்சத்திர ஓட்டல்களுக்கு மதிப்பீடு (Review) அளித்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, திருச்சியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரிடம் ரூ.1.90 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள தொழில்நுட்பப் பூங்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் சுவாதி. கடந்த 1ஆம் தேதி இவரது 'டெலிகிராம்' செயலி மூலமாகத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கூகுள் மேப்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு மதிப்பீடு வழங்குவதன் மூலம் ஆன்லைன் மூலமாக எளிதில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சுவாதி, அந்த நபர் அனுப்பிய இணைப்புகளின்படி நட்சத்திர ஓட்டல்களுக்கு மதிப்பீடுகளை அளித்துள்ளார். முதற்கட்டமாக இவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சுவாதியின் வங்கிக் கணக்கிற்கு ரூ.3,000 லாபத் தொகை அனுப்பப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நம்பிய சுவாதி, தொடர்ந்து மர்ம நபர் கூறிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக இவரது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.1,90,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி, அந்த டெலிகிராம் கணக்கைத் தொடர்பு கொள்ள முயன்றபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
காய்ந்த வேப்ப மரத்தின் குச்சிகளை வைத்து தனது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்.செய்திகள்

காய்ந்த வேப்ப மரத்தின் குச்சிகளை வைத்து தனது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்.

Manimaran🕒 நவ. 27
மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை... வேளாங்கண்ணியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்!நகரங்கள்

மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை... வேளாங்கண்ணியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்!

Sugumaran🕒 நவ. 27
மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!நகரங்கள்

மாணவர்கள் பங்கேற்புடன் விருதுநகரில் கோலாகலமாக நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

Ramkumarsamy🕒 நவ. 27
உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

உற்சாகத்துடன் தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள்: நாகை கலெக்டர் தொடங்கி வைத்தார்!

Sugumaran🕒 நவ. 27
முதியவர்களுடன் உணவு உண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!நகரங்கள்

முதியவர்களுடன் உணவு உண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!

SASHVI🕒 நவ. 27
மாணவர்களுடன் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!நகரங்கள்

மாணவர்களுடன் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!

ARAVINDHAN🕒 நவ. 27
கிணற்றில் மிதந்த இளைஞர் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!செய்திகள்

கிணற்றில் மிதந்த இளைஞர் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

Srinivasan🕒 நவ. 27
சபரிமலை யாத்திரை சென்றோர்க்கு நேர்ந்த சோகம்: மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்து!செய்திகள்

சபரிமலை யாத்திரை சென்றோர்க்கு நேர்ந்த சோகம்: மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்து!

Ramachandran🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔