நாகப்பட்டினம் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. கீலையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் டயானா சர்மிளா, பேரூர் திமுக செயலாளர் மரிய.சார்லஸ் உள்ளிட்ட பல முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.









