மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். முன்னாள் மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். இதில் அதிமுக குத்தாலம் வடக்கு ஒன்றியப் பொருளாளர் கணேசன், முன்னாள் ஒன்றியப் பேரவைச் செயலாளர் அய்யா ராமகிருஷ்ணன், ஒன்றியத் துணைச் செயலாளர் இளங்கோவன், திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கமணி, அரிவேலூர் மதிவாணன், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தில்லைராஜன், காத்தலிங்கம், விஜயபாரதி, துரைராஜ், அமமுக ஒன்றியச் செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 50 பேர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் கோபிநாத் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் மணி, நெடுமாறன், கூட்டுறவு வங்கி இயக்குநர் அழகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.
🕒 7 நவ., 2026, 08:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1








