திருச்சி மாவட்டம் துறையூரில், குடிநீர் பிரச்சினை குறித்து முறையிடச் சென்ற கார்த்திக்குமார் என்பவரை சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துறையூர் பழைய அண்ணா பேருந்து நிலையம் முன்பு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.









