Settings

முகப்பு/அரசியல்/2029 தேர்தலை நோக்கி களம் காணும் காங்கிரஸ்: நாளை பிரம்மாண்ட பயிற்சி முகாம்!
அரசியல்

2029 தேர்தலை நோக்கி களம் காணும் காங்கிரஸ்: நாளை பிரம்மாண்ட பயிற்சி முகாம்!

🕒 11 நவ., 2026, 02:39 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
2029 தேர்தலை நோக்கி களம் காணும் காங்கிரஸ்: நாளை பிரம்மாண்ட பயிற்சி முகாம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாளை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி அழைப்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டையில் நாளை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ராமலட்சுமி காங்கிரஸ் மகளிர் அணியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த முகாம் குறித்து அவர் கூறுகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மரியாதைக்குரிய மாணிக்கம் தாகூர் அவர்கள் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு, தெற்கு, திருச்சி மாநகரம், திருச்சி வடக்கு, தெற்கு ஆகிய ஐந்து மாவட்டங்களின் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்எஸ்ஏ 2 பொறுப்பாளர்களான மண்டல, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வருகிறார். அதற்காக மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் மாநிலத் தலைவரை வரவேற்று அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி பகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் மூன்று பேர் மகளிர் நிர்வாகிகளும் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி இப்போதே தேர்தல் பணியில் ஈடுபடுத்த அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியில் 50 சதவீதம் மகளிரை பொறுப்புகளில் நியமிக்கும் விதமாக 2027 ஏப்ரலில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் என பல பொறுப்புகளிலும் காங்கிரஸ் கட்சி மகளிர் அணியைத் தேர்வு செய்து நியமிக்கும் தேர்தல் பணியையும் இப்போதே தொடங்க வேண்டி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி கூட்டணி குறித்து தலைவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி கூட்டணி சேர்ந்து போட்டியிடப்படும். ஏற்கனவே கிராம கமிட்டிகளைப் பலப்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகளை ஆங்காங்கே அளித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் நடைபெறும் பயிற்சியானது மண்டலப் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் மூலம் கிராமக் கமிட்டிகள், மகளிர் அணியினர் பலப்படுத்தப்படும் என்றார். அவருடன் புதுக்கோட்டை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன், வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கௌரி, குன்றாண்டார் கோவில் ஒன்றியப் பொறுப்பாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்அரசியல்

ஊராட்சி அலுவலகம் பூட்டி தவெக போராட்டம்

VASANTHA🕒 நவ. 21
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔