திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆம்பூர் தாலுக்கா குழு சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுக்கா செயலாளர் R. மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.J. சீனிவாசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் வ. அருள்சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
- பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- ஆம்பூர் தாலுக்காவில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.
- மூடப்பட்டுள்ள தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும்.
- விண்ணமங்கலம் ஏரியைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும்.
- வெள்ளக்கல் அணையைக் கட்டி முடிக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.









