Settings

முகப்பு/அரசியல்/ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் புத்தகம் எழுதி ஊழல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
அரசியல்

ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் புத்தகம் எழுதி ஊழல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

🕒 10 நவ., 2026, 09:35 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் புத்தகம் எழுதி ஊழல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் புத்தகங்களை எழுதி விற்று ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

"மேற்காசிய நாடுகளில் போர்ப் பதற்றங்கள் நிலவும் சூழலிலும், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.900-க்கு வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் யூரியா உரம் விவசாயிகளுக்கு ரூ.242-க்கும், டி.ஏ.பி உரம் ரூ.1,350-க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தவெக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, தற்போது ரூ.75,000 மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையன்று மட்டும் தமிழகத்தில் 15 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 6 மாதங்களில் 40 முதல் 50 படுகொலைகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு படுகொலைகள் நடந்தது இல்லையா, அதை விடக் குறைவாகத்தான் நடந்துள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். ஒரு அமைச்சர் இப்படிப் பேசலாமா? தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரமே இதனைக் கண்டித்துள்ளார்."

மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், "தமிழகத்திற்கு நிச்சயமாகத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் எந்தவொரு அணையும் கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க-வின் தெளிவான நிலைப்பாடு" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே இன்று பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்கள் யாரை நாடிச் செல்வார்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், திருச்சியில் துணை சபாநாயகரிடம் மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி, புகார் அளிக்கச் சென்றவரை மிரட்டி வீடியோ வெளியிட்டு, கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார்களைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றார். பெரியார் அறிவுலகம் தொடர்பான சர்ச்சையில் குறிப்பிடப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பகம் முகவரியில் யாருமே இல்லை என்றும், முற்காலத்தில் நூல்களில் ஆசிரியரின் பெயர் தெளிவாக இருக்கும் நிலையில், தற்போது திரிஷா, விஜய் போன்ற புனைப்பெயர்களில் நூல்கள் இடம்பெற்று ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புத்தகங்களை எழுதி விற்று ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கும் முதலமைச்சருக்கும் உண்டு என்றார்.

காவல்துறையினர் நலன் குறித்துப் பேசுகையில், பணியில் இருக்கும் காவல்துறையினர் உயிரிழந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, தற்போது ரூ.40 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அனைத்து காவல்துறையினருக்கும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு முதலமைச்சர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், இத்தனை சம்பவங்கள் நடக்கும் போது வாய் திறக்காமல் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கைஅரசியல்

திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Vijayaragavan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔