Settings

முகப்பு/அரசியல்/துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புதிய குற்றச்சாட்டு: மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நபர் புகார்!
அரசியல்

துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புதிய குற்றச்சாட்டு: மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நபர் புகார்!

🕒 9 நவ., 2026, 08:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புதிய குற்றச்சாட்டு: மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நபர் புகார்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி துறையூரில் அடிப்படைப் பிரச்சனை குறித்து முறையிட்ட நபரைத் தாக்கியதுடன், மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புதிய புகார் எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்துத் தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும், அவர் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று மாலை அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக் குமார், அங்கு நின்றுகொண்டிருந்த துணை சபாநாயகரின் காரைப் பார்த்துவிட்டு, தன் பகுதி அடிப்படை பிரச்சனைகளை முறையிட சென்றுள்ளார். அப்போது, காரில் இருந்து இறங்கி வந்த துணை சபாநாயகர் ரவிசங்கர், எந்தவொரு கேள்வியும் கேட்காமல் பொது மக்கள் மத்தியில் கார்த்திக் குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாகத் தாக்கி, எட்டி உதைத்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் குமார் சமயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னை துணை சபாநாயகர் தாக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கார்த்திக் குமார், துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்தவாறு பேசுவது போன்ற வீடியோ ஒன்று இன்று காலை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. *இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துக் கார்த்திக் குமார் தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்:-* துறையூர் நகராட்சியிலும் சட்டமன்ற அலுவலகத்திலும் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் தான், துணை சபாநாயகரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கச் சென்றேன். ஆனால், அவர் என்னை மிகக் கொடூரமாகத் தாக்கி ஓடவிட்டார். அதன் பிறகு, மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் கிருபாநிதி என்னை வலுக்கட்டாயமாகத் துணை சபாநாயகர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குத் துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் இணைந்து என்னை கடுமையாக மிரட்டினர். நாங்கள் சொல்வது போல் பேசவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம் எனத் துணை சபாநாயகர் மிரட்டினார். சுமார் 6-க்கும் மேற்பட்ட முறை டேக் எடுத்து, அவர்கள் எழுதி கொடுத்த வசனங்களைப் பேச வைத்து அந்த வீடியோவைப் பதிவு செய்தனர். எனது உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே வேறு வழியின்றி பயந்து அந்த வீடியோவில் அவ்வாறு பேசினேன். சமூக வலைதளங்களில் பரவுவது போல் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. எனக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கார்த்திக் குமார் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!அரசியல்

திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டி: அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள்!

VASANTHA🕒 நவ. 21
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கைஅரசியல்

திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Vijayaragavan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔