விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், புதுடெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'வாக்கை காப்போம் - நாட்டை காப்போம்' பேரணியில் பங்கேற்று திரும்பிய நிர்வாகிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பை ஏற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செ. சிவா ஏற்பாட்டின் பேரில் டெல்லி பேரணியில் கட்சியினர் கலந்துகொண்டனர். இதனைக் கொண்டாடும் வகையிலும், தீபாவளி திருநாளை முன்னிட்டும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் காரங்கள் வழங்கப்பட்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில நிரந்தர அழைப்பாளர் கோ. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஸ்வநாதன், முபாரக் அலி, காஜா மொய்தீன், ஜி.ஆர். சீனுவாசன், மாவட்ட செயலாளர் பாரி பாபு, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மாநில மகிலா காங்கிரஸ் செயலாளர் மகேஸ்வரி, மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி மேரி ஸ்டெல்லா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.









