Settings

முகப்பு/வணிகம்/அம்மாடியோவ்! தீபாவளி கொண்டாட்டம்: ஒரே சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
வணிகம்

அம்மாடியோவ்! தீபாவளி கொண்டாட்டம்: ஒரே சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

🕒 6 நவ., 2026, 09:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அம்மாடியோவ்! தீபாவளி கொண்டாட்டம்: ஒரே சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஆடுகள் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஆடுகள் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற ஆடுகள் வாரச்சந்தை இன்று காலை தொடங்கியது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் அசைவ உணவு உண்பது வழக்கம் என்பதால், சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை கணிசமாக அதிகரித்தது. ஆடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

இந்தச் சந்தைக்கு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே குவிந்தனர்.

வழக்கமாக ரூ.6,000 வரை விற்பனையாகும் செம்மறி ஆடு, பண்டிகையை முன்னிட்டு தற்போது ரூ.7,500 முதல் ரூ.8,500 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 10 கிலோ எடையுள்ள ஒரு வெள்ளாடு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு ஜோடி ஆடுகள் ரூ.45,000 வரை விலைபோனது.

இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கிய இந்த வர்த்தகத்தில் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், சந்தைக்குக் கூடுதல் ஆடுகள் விற்பனைக்கு வந்த போதிலும் விலை குறையாததால், இந்த முறை தீபாவளி பண்டிகையின் போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1,000 வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு எதிர்பார்த்ததை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: நாமக்கல்லில் அதிரடியாக குறைந்த முட்டை விலை!வணிகம்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: நாமக்கல்லில் அதிரடியாக குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 11
70% வியாபாரம் சரிவு! திருச்சியில் நாளை கடையடைப்பு மற்றும் கருப்பு தீபாவளி போராட்டம்!வணிகம்

70% வியாபாரம் சரிவு! திருச்சியில் நாளை கடையடைப்பு மற்றும் கருப்பு தீபாவளி போராட்டம்!

Subairudheen.M🕒 நவ. 6
மக்களுக்கு குட் நியூஸ்! கோவையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை தொடக்கம்வணிகம்

மக்களுக்கு குட் நியூஸ்! கோவையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை தொடக்கம்

THIRUMENI T E🕒 நவ. 5
முட்டை பிரியர்களே கவனிங்க! நாமக்கல்லில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை.வணிகம்

முட்டை பிரியர்களே கவனிங்க! நாமக்கல்லில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை.

SRIDHAR🕒 நவ. 4
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔