தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ள 'வெற்றி காய்கறி தொகுப்பு' திட்டத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் பவண் குமார் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், 10 வகையான அத்தியாவசிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, தலா 100 ரூபாய் என்ற கட்டுப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்று முதல் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பவண் குமார் கூறுகையில், கோவையில் உள்ள 13 கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்கள் இந்த காய்கறி தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.









