நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக இருந்த நிலையில், சந்தை நிலவரம் மற்றும் தேவைக்கேற்ப இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, நாமக்கல் மண்டலத்தின் முட்டை வர்த்தகத்தில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.









