Settings

முகப்பு/செய்திகள்/மெய்வழிச்சாலை கிராமத்தில் குப்பைகளை அகற்ற அரசு இடம் கோரி ஆட்சியரிடம் மனு!
செய்திகள்

மெய்வழிச்சாலை கிராமத்தில் குப்பைகளை அகற்ற அரசு இடம் கோரி ஆட்சியரிடம் மனு!

🕒 23 நவ., 2026, 02:40 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மெய்வழிச்சாலை கிராமத்தில் குப்பைகளை அகற்ற அரசு இடம் கோரி ஆட்சியரிடம் மனு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை கிராமத்தில் அதிகரித்து வரும் குப்பைகளை முறையாக நிர்வகிக்க அரசு இடம் ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெய்வழிச்சாலை கிராமத்தில் தேங்கும் குப்பைகளை முறையாக நிர்வகிக்க அரசுக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே உள்ள ஊறல் மலைக்காடு பகுதியில், கடந்த 1940களில் சாலை ஆண்டவர் என்று அழைக்கப்படும் காதர் பாட்சா என்பவரால் மெய்வழிச்சாலை கிராமம் உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் 'அனந்தர்கள்' என்றும், பெண்கள் 'அனந்தகிகள்' என்றும் அழைக்கப்படுகின்றனர். தங்களது பெயருக்கு முன்னால் 'சாலை' என்ற பெயரை இணைத்துக் கொள்வது இவர்களின் வழக்கமாகும். எளிமையான வாழ்க்கை முறைத் தத்துவங்களைக் கடைப்பிடித்து வரும் இக்கிராமத்தில், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கிராமத்தில் சேரும் குப்பைகளை தனியாக ஓரிடத்தில் கொட்டிப் பராமரிக்க போதிய இடவசதி இல்லை என்றும், இதற்காக அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராமத்தின் சார்பில் மணிகண்டன் கூறுகையில், "எங்களது மெய்வழிச்சாலை கிராமத்தில் முன்பு வசித்தவர்களைக் காட்டிலும், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வந்து குடியேறியுள்ளனர். இதனால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதுடன், இங்குள்ள பொன்னரங்க தேவாலயத்தில் நடைபெறும் விழாக்களுக்கு வந்து செல்லும் 5,000 முதல் 10,000-க்கும் மேற்பட்ட மக்களால் ஏராளமான குப்பைகள் சேருகின்றன" என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இதுவரை எங்களது சபையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு குப்பை மேலாண்மைச் பணிகள் சரியாகச் செய்யப்பட்டு வந்தன. தற்போது எங்கள் கிராமத்தில் சேரும் குப்பையைப் பராமரிக்கும் இடத்திற்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் இருப்பதால், அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். இதனால் குப்பைப் பராமரிப்பில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் தற்போது ஐந்து கிராமங்களில் பெருகி வசித்து வருவதால், அந்த ஐந்து ஊராட்சிகளிலும் குப்பை மேலாண்மைக்காக இடம் ஒதுக்கக் கோரியபோது மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இதனால் தனிநபர் இடங்களில் குப்பைகள் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

Manimaran🕒 நவ. 23
மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்புசெய்திகள்

மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்பு

Vijay🕒 நவ. 23
"டென்ஷனில் மாற்றிச் செய்துவிட்டேன்" - அலட்சியமாகப் பதிலளித்த டாக்டர்! கதறும் மாணவனின் பெற்றோர்!செய்திகள்

"டென்ஷனில் மாற்றிச் செய்துவிட்டேன்" - அலட்சியமாகப் பதிலளித்த டாக்டர்! கதறும் மாணவனின் பெற்றோர்!

Vijayaragavan🕒 நவ. 23
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் செவிலியர்கள் போராட்டம்!செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் செவிலியர்கள் போராட்டம்!

SASHVI🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!நகரங்கள்

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!

Ramachandran🕒 நவ. 23
மதுபோதையில் நேர்ந்த கொடூரம்! சிவகாசியில் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்நகரங்கள்

மதுபோதையில் நேர்ந்த கொடூரம்! சிவகாசியில் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்

Ramkumarsamy🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔