Settings

முகப்பு/செய்திகள்/சிவப்பு கேப் அணிந்த ஊழியர்கள், கியூ.ஆர் கோடு வசதி: திருவண்ணாமலை மகாதீப ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

சிவப்பு கேப் அணிந்த ஊழியர்கள், கியூ.ஆர் கோடு வசதி: திருவண்ணாமலை மகாதீப ஏற்பாடுகள் தீவிரம்!

🕒 23 நவ., 2026, 02:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிவப்பு கேப் அணிந்த ஊழியர்கள், கியூ.ஆர் கோடு வசதி: திருவண்ணாமலை மகாதீப ஏற்பாடுகள் தீவிரம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் விவரம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விரிவான விளக்கமளித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

பரணி தீபம் மற்றும் மகாதீப தரிசனத்திற்கு கட்டண முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, 3,000 பேருக்கு இலவச ஆன்லைன் பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை பக்தர்கள் கூட்டம் அலைமோதுவார் என்பதால், கோவில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், பொதுமக்களின் தேவைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகப் போதுமான பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க சிறப்பு நிழற்குடைகளும், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தவும் சரியான வழிகாட்டவும் சிவப்பு நிற தொப்பி அணிந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலப் பாதைக்குச் செல்வதற்கும் முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் உள்ள கியூ.ஆர் (QR) கோடை ஸ்கேன் செய்வதன் மூலம், பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!செய்திகள்

போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

Manimaran🕒 நவ. 23
மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்புசெய்திகள்

மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்பு

Vijay🕒 நவ. 23
"டென்ஷனில் மாற்றிச் செய்துவிட்டேன்" - அலட்சியமாகப் பதிலளித்த டாக்டர்! கதறும் மாணவனின் பெற்றோர்!செய்திகள்

"டென்ஷனில் மாற்றிச் செய்துவிட்டேன்" - அலட்சியமாகப் பதிலளித்த டாக்டர்! கதறும் மாணவனின் பெற்றோர்!

Vijayaragavan🕒 நவ. 23
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் செவிலியர்கள் போராட்டம்!செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் செவிலியர்கள் போராட்டம்!

SASHVI🕒 நவ. 23
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் சிக்கிய நபர்கள்!

Srinivasan🕒 நவ. 23
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!நகரங்கள்

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!

Ramachandran🕒 நவ. 23
மதுபோதையில் நேர்ந்த கொடூரம்! சிவகாசியில் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்நகரங்கள்

மதுபோதையில் நேர்ந்த கொடூரம்! சிவகாசியில் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்

Ramkumarsamy🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔