மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே உள்ள தமிழ்ச் சங்கம் முன்பு, மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அண்மையில் பேசுபொருளாகியுள்ள திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாகக் கண்டனக் குரல்களும், கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.









