மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் நடுவே காவிரி ஆறு ஓடுகிறது. காசிக்கு இணையான புண்ணிய இடங்களில் மயிலாடுதுறை காவிரி ஆறு ஒன்றாகும். இங்கு ஐப்பசி மாதம், கங்கை யமுனை உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள காவிரியில் நீராடுவதாக ஐதீகம். இதற்காக ஐப்பசி மாதம் மயிலாடுதுறை நகரில் உள்ள மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம், விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் ஐப்பசி மாதம் கடைசி 10 நாள் துலா உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடுபடுவது வழக்கம். மாதம் முழுவதும் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறும் நிலையில், உற்சவம் கொடியேற்றம் நடைபெற்ற பிறகு பத்து நாட்களும் சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள், முருகன் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் காவிரி கரையில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதும் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறுவதும் வழக்கம். மூன்றாவது நாளாக இன்று மயூரநாதர் ஆலயத்தில் பொதுமக்கள் பங்களிப்பில் ஒரு லட்சம் ருத்ராட்சைகளால் செய்யப்பட்ட வெள்ளி ருத்ராட்ச மஞ்சத்தில் மாயூரநாதர் அபயாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு காவிரி கரைக்கு வந்தடைந்தது. இதேபோல் வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரண்டு பக்க கரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரை, கொண்டு பம்புகள் உதவியுடன் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆதீனங்களின் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்
வெள்ளி ருத்ராட்ச மஞ்சத்தில் மாயூரநாதர் வீதி உலா: மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மீகத் காட்சிகள்!
🕒 9 நவ., 2026, 01:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்தின் மூன்றாம் நாளை முன்னிட்டு, பல்வேறு சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








