Settings

முகப்பு/தமிழ்நாடு/கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!
தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

🕒 21 நவ., 2026, 04:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருச்சி - வேலூர் இடையே நவம்பர் 23 முதல் 25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு இன்று தொடங்குகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் இடையே நவம்பர் 23 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், பிற்பகல் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் காலை 7.20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் ஆரணி சாலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Srinivasan🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

SRIDHAR🕒 நவ. 19
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔