திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் தலைமை தாங்கினார். வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெறவுள்ள உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை, கட்சி சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் தி.கௌதம், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் மாசிலாமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இரா.ஜனகராஜ், வழக்கறிஞர் இரா.கண்ணப்பன், A.மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, N.ரமணன், ரவிக்குமார், சீனிராஜன் மற்றும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செ.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.









