திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவைக் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் வேலூர் மார்க்கமாக சிறப்பு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விவரம்:
- திருவண்ணாமலை - விழுப்புரம் (06097): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். (திருக்கோவிலூரில் மட்டும் நிற்கும்).
- விழுப்புரம் - திருவண்ணாமலை (06098): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
- திருவண்ணாமலை - விழுப்புரம் (06095): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். (திருக்கோவிலூரில் மட்டும் நிற்கும்).
- விழுப்புரம் - திருவண்ணாமலை (06096): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
- திருவண்ணாமலை - விழுப்புரம் (06129): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். (வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பாளையம், தண்டரை ஆகிய நிலையங்களில் நிற்கும்).
- விழுப்புரம் - திருவண்ணாமலை (06130): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
- விழுப்புரம் - வேலூர் கான்ட் (06062): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் சென்றடையும்.
- வேலூர் கான்ட் - விழுப்புரம் (06061): நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு காலை 5.00 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.









