Settings

முகப்பு/தமிழ்நாடு/திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

🕒 20 நவ., 2026, 09:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே காரில் வந்த ஆண் மற்றும் பெண் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட் பகுதியில் காரில் வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய இருவரும் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பிளாட்டிற்கு காரில் வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆண் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் ரஞ்சித் (45) என்பது தெரியவந்துள்ளது. எனினும், அவருடன் வந்த பெண் யார் என்பது குறித்த விவரம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விவகாரம் அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

SRIDHAR🕒 நவ. 19
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔