Settings

முகப்பு/தமிழ்நாடு/ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்
தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

🕒 19 நவ., 2026, 11:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நாமக்கல்லில் வழக்கறிஞர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, விவசாய சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல்லில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு விவசாய சங்கத் தலைவர் கடத்தப்பட்ட வழக்கில், பிரபல வழக்கறிஞர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, விவசாய சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (65), விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி, ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மர்ம கும்பலால் அவரும் அவரது கார் ஓட்டுநர் அஜ்மத்தும் கடத்தப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 9 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கில் மேலும் 3 பேருடன் ஒரு வழக்கறிஞருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோபாலகிருஷ்ணன் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்திருந்தார். இதற்கிடையே, நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அய்யாவு மீது அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், பொய்யான புகாரை அளித்துள்ள கோபாலகிருஷ்ணன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எஸ்.பி கிரிஷ் யாதவ் அசோக்கிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராசிபுரத்தில் விவசாய சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கடத்தப்பட்ட வழக்கில் பார் கவுன்சில் உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான அய்யாவு மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் கோபாலகிருஷ்ணன் பொய்யான புகார் அளித்துள்ளார். அவர் மீது களங்கம் விளைவிக்கும் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்" என்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Srinivasan🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔