Settings

முகப்பு/கல்வி/நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
கல்வி

நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

🕒 2 நவ., 2026, 01:12 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நெட்/செட் தேர்வுக்கான 10 நாள் சிறப்புப் பயிலரங்கம் தொடங்கியது. தேர்வில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை துணைவேந்தர் விளக்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை ​மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை சார்பில், கல்லூரி மாணவ-மாணவிகள், முதுநிலைப் பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பணியில் ஆர்வம் உள்ளவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை எதிர்கொள்ளும் நோக்கிலும் யு.ஜி.சி. - நெட் / செட் தேர்வுக்கான பத்து நாள் பயிலரங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ​இந்நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் க.இராஜமன்னார் வரவேற்புரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ச.பிரபாகர் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் பேசுகையில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் மாணவர்கள் சாதிக்க நெட் / செட் தேர்வு மிகவும் அவசியமானதாகும் என்றார். மேலும், இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பாட அறிவு, தேர்வு அணுகுமுறை, நேர மேலாண்மை, பாடத் திட்டத்தை முழுமையாக அறிந்து, முக்கியமான கருத்துகளைத் தொகுத்து, தினசரி மறுபாய்வு செய்வதன் மூலமும், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதுடன், மாதிரித் தேர்வுகளில் பங்கேற்பதன் மூலமும், இதுபோன்ற பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதன் மூலமும் எளிதில் நெட் / செட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று குறிப்பிட்டார். ​தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாக வணிகவியல் துறை இணைப் பேராசிரியரும், துறை தலைவருமான முனைவர் வி.அருள்முருகன் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், இதுபோன்ற நெட் / செட் தேர்வுக்கான பயிலரங்கங்கள், மாணவர்களுக்கு தேர்வுக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கும், பாட அறிவை மேம்படுத்துவதற்கும், தேர்வு குறித்த அச்சத்தைப் போக்குவதற்கும், பயிலரங்கத்தில் வழங்கப்படும் கருத்துகள், தேர்வு உத்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் நெட் / செட் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்றார். ​விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை நிர்வாகவியல் துறை பேராசிரியர் ப. இரவி வாழ்த்துரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ம. மணிடா நன்றியுரை வழங்கினார். மேலும், இப்பயிலரங்கத்தில் நெட் / செட் தேர்வுக்கான முதல் தாள் மற்றும் வணிகவியல் இரண்டாம் தாளுக்கான பாடத்திட்டத்தின் பயிற்சி 05.11.2026 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குழந்தைகள் பாதுகாப்பு தீவிரம்: ராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் அதிரடி ஆய்வுக் கூட்டம்!கல்வி

குழந்தைகள் பாதுகாப்பு தீவிரம்: ராமநாதபுரத்தில் ஆட்சியர் தலைமையில் அதிரடி ஆய்வுக் கூட்டம்!

MATHANRAJ🕒 நவ. 4
மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!கல்வி

மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!

Srinivasan🕒 நவ. 4
திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டுகல்வி

திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டு

S. Ravichandran🕒 நவ. 3
திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!கல்வி

திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!

Vijay🕒 நவ. 2
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔