கோவையில் நடைபெற்ற தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி திட்டத் தேர்வில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பிரபாதேவி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி பிரபாதேவி, அண்மையில் நடைபெற்ற திறன் பயிற்சி திட்டத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
படிப்பில் சிறந்து விளங்கி அரசுத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்குத் தேர்வாகியுள்ள மாணவி பிரபாதேவிக்கு, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.









