நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (TNEB/TNPDCL), கள உதவியாளர் பதவிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 219 நபர்களுக்கு, கரூர் மண்டலம், நாமக்கல் மின்பகிர்மான வட்டம் சார்பில் இராசிபுரம் கோட்ட அலுவலக வளாகத்தில் எதிர்வரும் 11.11.2026 மற்றும் 12.11.2026 ஆகிய இரண்டு நாட்கள் நேரம் காலை 7 மணி முதல் மாலை 4 வரை உடல் தகுதி தேர்வு பின்வரும் இடத்தில் நடைபெற உள்ளது எனவே விண்ணப்பதார்கள் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவித்துள்ள ஆவணங்களுடன் அதில் குறிப்பிட்டுள்ள நாளில், உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.









