Settings

முகப்பு/கல்வி/மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது.
கல்வி

மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது.

🕒 4 நவ., 2026, 04:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது. - படம் 1 - The News Outlook
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மறமடக்கி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் 2026- 2027 நிகழ்ச்சி 04.11.2026 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வம் , கவிதையாற்றல் மற்றும் மொழித்திறனை வளர்க்கவும் தமிழ்மொழி , இலக்கியம் மற்றும் பண்பாட்டை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு முக்கியமான இலக்கிய நிகழ்வு தமிழ்க் கூடலாகும். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் சி. தங்கமணி தலைமை தாங்கினார். தமிழ்மொழியின் வரலாறு, சிறப்பு, தமிழ்மொழி தோன்றிய விதம், தமிழ் கற்பதால் ஏற்படும் மகிழ்ச்சி, இலக்கிய நூல்கள் தமிழ்ப் புலவர்கள் பற்றி கவிஞர் தமிழ்ச்செம்மல் ரமா இராமநாதன் இலக்கியச் சிறப்புரையாற்றினார். பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆர்னிகன் மற்றும் மேனகா ஆகியோர் தமிழ்க்கூடல் நிகழ்வு பற்றி மாணவர்கள் சார்பாக சிறப்பாக பேசினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.அண்ணாத்துரை , பள்ளியின் மேலாண்மைக்குழுத் தலைவர் சுப.அழகர்துரை , முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி மதியழகன் , முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி. இராஜமனோகரிரவி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இரா. அன்பரசு, பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் திருமதி. க. மகேஸ்வரி, பள்ளி ஆலோசகர் வ.மு.ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்க் கூடல் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர். முன்னதாக வந்திருந்த அனைவரையும் இலக்கிய மன்றச் செயலாளர் தமிழாசிரியர் கா.கங்காராணி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் சி.ஜெயராமன் நன்றி கூறினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!கல்வி

மாவட்ட ஆட்சியர் முன்பே உடைந்த உண்மை: அரசு மகளிர் விடுதியின் அதிர்ச்சிக்கும் பின்னணி!

Srinivasan🕒 நவ. 4
திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டுகல்வி

திறன் பயிற்சிக்குத் தேர்வான வால்பாறை மாணவிக்கு பாராட்டு

S. Ravichandran🕒 நவ. 3
நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுகல்வி

நெட் / செட் தேர்வில் வெற்றி பெற தொடர் பயிற்சி அவசியம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

Vijayaragavan🕒 நவ. 2
திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!கல்வி

திறமைகளை வெளிப்படுத்திய விடுதி மாணவர்கள்: ஆட்சியர் கையில் பரிசு!

Vijay🕒 நவ. 2
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔