Settings

முகப்பு/தமிழ்நாடு/கரூரில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு எதிரொலி: குளத்தில் கலக்கும் கழிவுநீரால் மக்கள் கடும் அதிர்ச்சி!
தமிழ்நாடு

கரூரில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு எதிரொலி: குளத்தில் கலக்கும் கழிவுநீரால் மக்கள் கடும் அதிர்ச்சி!

🕒 15 நவ., 2026, 01:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கரூரில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு எதிரொலி: குளத்தில் கலக்கும் கழிவுநீரால் மக்கள் கடும் அதிர்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 9
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (9)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் காதப்பாறை வெ.பசுபதிபாளையத்தில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் குளத்தில் கழிவுநீர் கலப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூரில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட வெ.பசுபதிபாளையம் பகுதியில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெ.பசுபதிபாளையம் கிராமத்தில் உள்ள குட்டாணி முடக்கு பகுதியில் மழைநீர் வடிகாலாகப் பயன்படும் நீர்வழிப்பாதை அமைந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மனைப்பிரிவு மற்றும் அருகில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நீர்வழிப்பாதை வழியாக குளத்தில் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சர்வே எண் 142/1A, 142/2A ஆகிய நிலப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர் நீர்நிலையைச் சென்றடைவதால், குளத்தின் நீர் முற்றிலுமாக மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, தங்களது கோரிக்கையை மீண்டும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் பொதுமக்கள் நேரடியாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது புகார்களைத் தெரிவித்தனர்.

நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதுடன், குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருச்சி – வேலூர் இடையே நவ.23 முதல் சிறப்பு ரயில் இயக்கம்!

MSD🕒 நவ. 21
நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!தமிழ்நாடு

நாகை: மை பாரத் விக்சித் பாரத் 2047 இளையோர் கலைத் திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா!

Sugumaran🕒 நவ. 20
திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

திருப்பத்தூரில் பயங்கரம்: காருக்குள் வைத்து ஆண், பெண் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Srinivasan🕒 நவ. 20
அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!தமிழ்நாடு

அடகு வைக்க கொண்டு சென்ற 1 சவரன் நகை மாயம்: பேருந்து நிலையத்தில் கதறிய பெண்!

Srinivasan🕒 நவ. 20
ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்தமிழ்நாடு

ஒரு கோடி ரூபாய் கடத்தல் விவகாரம்: நாமக்கல்லில் பரபரப்பான திருப்பமும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அதிரடி புகார்

SRIDHAR🕒 நவ. 19
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔