செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடற்கூராய்வு அறிக்கை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு, விசாரணை அதிகாரியான மாஜிஸ்திரேட் ஆனந்த ராஜாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செக்கானூரணி காவல் நிலையக் காவலில் இருந்தபோது லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் ஆனந்த ராஜா தலைமையில் கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடல் உடற்கூராய்வு (Postmortem) செய்யப்பட்டுள்ளது.
இந்த உடற்கூராய்வு அறிக்கை தற்போது மாஜிஸ்திரேட் ஆனந்த ராஜாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், காவல் நிலைய மரணம் தொடர்பான விசாரணையில் மேலும் பல முக்கிய உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









