யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், நாட்டுப் படகுடன் பாம்பன் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கடந்த நவம்பர் 09 அன்று மதியம் 12.00 மணியளவில் வழக்கம்போல் மீன்பிடிக்கப் புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக, திசைமாறிய அவர்கள் ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதிக்கு வந்துசேர்ந்துள்ளனர்.
இன்று மாலை 6.00 மணியளவில் கலங்கரை விளக்கம் அருகே நாட்டுப் படகுடன் கரை ஒதுங்கிய அந்த இரண்டு மீனவர்களையும், தகவலறிந்த மண்டபம் காவல்துறையினர் உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.









