கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வை மாவட்ட ஆட்சியர் ச. பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு நடைபெறும் நடைமுறைகள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி மற்றும் அமைதியான முறையில் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.









