செய்திகள்
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மழை அளவுக்கருவி. மழை தான் பெய்யவில்லை.
🕒 7 நவ., 2026, 10:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை அளவுக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு பொதுவாக நீதிமன்ற வளாகத்தில் தான் மழை, காற்றின் வேகம், வெயில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் இதே போல் அமைக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் கருவிகளை காலை மாலை என ஆய்வாளர் வந்து ஆய்வு செய்து அலுவலகம் சென்று அறிவிப்பார்கள். ஆனாலும் தாலுகா அலுவலகத்தில் உள்ள இந்த மழைமாணியானது அலுவலகத்தில் இருந்தவாறு கண்காணிக்கும் வகையில் நவீனமாக பொருத்தப்பட்டுள்ளதாக தாலுகா அலுவலகத்தில் தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அதை பயன்படுத்தவோ பார்க்கவோ மழைதான் பெய்யவில்லை என்று பொதுமக்கள் வருந்துகிறார்கள்.








